Home நாடு பிகேஆர் தேர்தல் முடிவுகள், கட்சிக்கு சாதகமான முன்னேற்றம் – அன்வார் கூறுகிறார்

பிகேஆர் தேர்தல் முடிவுகள், கட்சிக்கு சாதகமான முன்னேற்றம் – அன்வார் கூறுகிறார்

840
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நடந்து முடிந்த பிகேஆர் கட்சியின் தேர்தல் முடிவுகள் கட்சிக்குக் கிடைத்த சாதகமான முன்னேற்றம் என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு பிகேஆர் மத்திய தேர்தல் குழு அறிவித்த அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின் அடிப்படையில், துணைத் தலைவராக ரபிஸி ரம்லி (மேலே) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

“எனினும், கட்சி அதிகாரப்பூர்வமாக முடிவுகளை அறிவித்தவுடன்தான் தேர்தல் குறித்த எனது கருத்துகளை வெளியிடுவேன்” என்று அன்வார் கூறினார்.

#TamilSchoolmychoice

“நான் ரபிசியைத் தொடர்பு கொண்டேன். தேர்தல் குழு முறையான அறிவிப்பை வெளியிட்ட பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவேன்” என்றும் அன்வார் தெரிவித்தார்.