Home நாடு எட்மண்ட் சந்தாரா பெர்சாத்து கட்சியிலிருந்து விலகினாரா?

எட்மண்ட் சந்தாரா பெர்சாத்து கட்சியிலிருந்து விலகினாரா?

429
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பெர்சாத்து கட்சியில் இருந்து விலகுவது குறித்து கடந்த வாரம் பெர்சாத்து பொதுச்செயலாளர் ஹம்சா சைனுதீனுக்கு சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் எட்மண்ட் சந்தாரா ஒரு கடிதத்தை சமர்ப்பித்தார் எனவும் அவர் தற்போது பெர்சாத்துவில் இருந்து விலகி விட்டார் எனவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மொகிதின் யாசின் தலைமையிலான கட்சியில் பூமிபுத்ரா அல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்காலம் இல்லை என்று சந்தாரா கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2020 இல் பெர்சத்துவில் இணைந்த முதல் பூமிபுத்ரா அல்லாத நாடாளுமன்ற உறுப்பினர் சந்தாரா ஆவார்.

#TamilSchoolmychoice

சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார துணை அமைச்சராகவும் அவர் பதவி வகிக்கிறார். பிகேஆர் கட்சியின் முன்னாள் உறுப்பினரான சந்தாரா செப்டம்பர் 2021-இல் பெர்சத்துவின் மலாய்க்காரர் அல்லாதோருக்கான இணைப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த ஆண்டு ஜனவரியில் தனது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து கருத்துரைத்த சந்தாரா, அடுத்த பொதுத் தேர்தலில் (GE15) பிற கட்சிகளில் சேருவதற்கு பல சலுகைகள் கிடைத்தாலும் பெர்சத்துவுடன் தான் தொடர்வதாக சாந்தாரா கூறினார்.

“எனது நிலைப்பாடு தெளிவாக உள்ளது. நான் கட்சித் தலைவர் மொகிதின் யாசினுடன் பெர்சத்துவில் இருப்பேன்,” என்று அவர் கட்சியில் சேருமாறு கேட்டுக் கொண்ட பார்ட்டி பங்சா மலேசியாவுக்கு (பிபிஎம்) பதிலளித்தார்.

சந்தாரா கட்சியிலிருந்து வெளியேறியதன் மூலம் பெர்சாத்து கட்சி,  பூமிபுத்ரா அல்லாத ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை  இழக்க நேரிடும்.

2020 ஆம் ஆண்டு ஷெரட்டன் நகர்வைத் தொடர்ந்து பிகேஆரில் இருந்து அஸ்மின் அலியைப் பின்தொடர்ந்து வெளியேறிய மற்ற 10 எம்.பி.க்களில் சந்தாராவும் ஒருவர்.

அப்போது அவர் துணையமைச்சராக இருந்தார். பின்னர் மொகிதினின் அமைச்சரவையிலும் அவர் துணை அமைச்சராகத் தொடர்ந்தார். கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக இருந்த அவர் தற்போது சுற்றுலாக் துறை துணை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.

பெர்தாத்துவின் மலாய்க்காரர் அல்லாதோரின் இணைப் பிரிவில் துணைத் தலைவராக இருக்கும் டாக்டர் சோங் பாட் புல், சந்தாரா இன்னும் பெர்சாத்துவின் அடிப்படை உறுப்பினராகத் தொடர்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.