Home நாடு கோலிவுட் சினிமா தயாரிப்பாளர்கள் இல்லங்களில் வருமான வரி சோதனை

கோலிவுட் சினிமா தயாரிப்பாளர்கள் இல்லங்களில் வருமான வரி சோதனை

524
0
SHARE
Ad
அன்பு செழியன்

சென்னை : தமிழ்த் திரையுலகில் பல படங்களுக்கு நிதியுதவி (பைனான்சியர்) செய்துவரும் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின்  உரிமையாளர் அன்புசெழியனுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தினர்.

டெல்லியில் இருந்து வந்த சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழுவினர் நடத்திய இந்த சோதனையைத் தொடர்ந்து மேலும் பல படத் தயாரிப்பாளர்கள் இல்லங்களிலும், தொடர்புடைய இடங்களிலும் சோதனைகள் தொடர்கின்றன.

அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை, மதுரையில் உள்ள வீடுகள், அலுவலகங்கள் மற்றும் அவரது நண்பர்களான பிரபல திரைப்பட தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா, டி.ஜி.தியாகராஜன், சீனிவாசனுக்கு சொந்தமான வீடுகள், சினிமா தயாரிப்பு நிறுவன அலுவலகங்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) முதல் நேற்று நள்ளிரவு வரை தொடர் சோதனைகள் நடத்தினர்.

#TamilSchoolmychoice

மதுரையில் சோதனைகள் நடத்திய பின்னர் சென்னை வந்த சிறப்பு அதிகாரியின் முன்னிலையில் அன்புசெழியனின் சகோதரர் அழகர்சாமியை அவரின் சென்னை வீட்டிற்கு அழைத்து வந்து வீட்டின் சென்சார் கதவுகளை திறந்து சோதனை நடத்தினர். அழகர்சாமி வீட்டில் உள்ள லாக்கர்கள் அனைத்தும் கருவிழித்திரை சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அழகர்சாமியை வைத்து அனைத்து சென்சார் லாக்கர்களையும் தொழில் நுட்ப அதிகாரிகளை வைத்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, கட்டுக்கட்டாக ரொக்க பணம், பினாமி பெயரில் வாங்கி குவித்துள்ள சொத்து பத்திரங்கள், கடன் கொடுத்த சினிமா தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்கி வைத்திருந்த சொத்து பத்திரங்கள் அனைத்து சிக்கியதாக கூறப்படுகிறது.