ஜோர்ஜ் டவுன் : 6 மாநிலத் தேர்தல்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பினாங்கு மாநிலத்திற்கு நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 7 வருகை தந்து, ஒற்றுமை அரசாங்க வேட்பாளர்களுக்கான பிரச்சாரத்தில் இறங்கினார்.
ஓராண்டுக்கு முன்னர் மலேசியர்கள் நினைத்துக் கூட பார்த்திர முடியாத சூழலில் சரவணன், முதன் முறையாக ஜசெக, பிகேஆர் கட்சி வேட்பாளர்களுக்கும் தான் சார்ந்துள்ள தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கும் ஆதரவாகக் களமிறங்கினார்.
பிறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமுவின் தேர்தல் நடவடிக்கை அலுவலகத்திற்கும் அவர் வருகை தந்து அங்கு குழுமியிருந்த ஆதரவாளர்களைச் சந்தித்தார்.
பாகான் டாலாம் தொகுதியில் போட்டியிடும் குமரன் கிருஷ்ணனையும் சந்தித்து தன் ஆதரவைத் தெரிவித்தார். பினாங்கு காபந்து முதல்வர் சௌ கோன் இயோவையும் சரவணன் சந்தித்தார். பினாங்கு வணிகப் பிரமுகர் டத்தோஸ்ரீ ஆர்.அருணாசலமும் இந்த சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மற்ற பிகேஆர், ஜசெக, தலைவர்களும் சரவணனுடன் பிரச்சாரத்தில் இணைந்தனர்.
நேற்று இரவு (ஆகஸ்ட் 7) நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்திலும் கலந்து கொண்டு சரவணன் உரையாற்றினார். சரவணனின் பினாங்கு வருகை தொடர்பிலான படக் காட்சிகளை இங்கே காணலாம்: