Home இந்தியா செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கிறது அமலாக்கத்துறை – அவர் கேட்டதோ தயிர் சாதம்

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கிறது அமலாக்கத்துறை – அவர் கேட்டதோ தயிர் சாதம்

457
0
SHARE
Ad

சென்னை : தமிழ் நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருக்கும் நிலையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 8) உத்தரவு பிறப்பித்தது.

அதைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக செந்தில் பாலாஜி புழல் சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து நேற்றிரவு அழைத்துச் செல்லப்பட்டார்

எப்போதும் மழுங்க சிரைக்கப்பட்ட (ஷேவ் செய்த)  முகத்துடன் காணப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது இளம் தாடியுடன், லேசான நரையுடன் காணப்படும் புகைப்படங்கள் தமிழக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் விசாரணை நடத்தும் அறைக்கு வெளியே மருத்துவர்கள் 2 பேர் அவரைத் தொடர்ந்து கண்காணித்து வருவர்.

தடுப்புக் காவலில் தன்னை  விசாரிக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் உண்ணுவதற்கு செந்தில் பாலாஜி தயிர் சாதம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.