Home நாடு டாயிம் சைனுடின் மனைவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்

டாயிம் சைனுடின் மனைவி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்

348
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடினின் மனைவி நைமா காலிட் நாளை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) குற்றம் சாட்டப்படவுள்ளார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய சட்டங்களின் 36-வது பிரிவின்படி, அந்த ஆணையம் வழங்கியு ஓர் உத்தரவுக் கடிதத்தை செயல்படுத்தாத காரணத்தால் நைமா காலிட் மீது குற்றம் சாட்டப்படுகிறது. தன் சொத்து விவரங்களை சமர்ப்பிக்குமாறு ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 100 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் நைமாவுக்கு விதிக்கப்படும்.

#TamilSchoolmychoice

டாயிம் சைனுடினின் இரண்டு புதல்வர்களும் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி விசாரணைக்காக ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

தங்களுக்கிருக்கும் அயல்நாட்டு சொத்துகள் ரகசியம் அல்ல – மாறாக அவை குறித்து பொது வெளியில் ஏற்கனவே தகவல்கள் இருந்தன எனவும் டாயிம் குடும்பத்தினர் தெரிவித்தனர்.