Home நாடு இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் குரு டாக்டர் கஜேந்திரா பண்டா குழுவினர் வழங்கும் ஓடிசி நடனங்கள்

இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் குரு டாக்டர் கஜேந்திரா பண்டா குழுவினர் வழங்கும் ஓடிசி நடனங்கள்

299
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான ஒடிசாவில் (முன்பு ஒரிசா) புகழ்பெற்ற பாரம்பரிய நடனக் கலை ஒடிசி என்பதாகும். நமது நாட்டின் முன்னணி நடனக் கலைஞரான ரம்லி இப்ராகிம் இந்த நடனத்தில் தேர்ச்சி பெற்றவர் என்பதுடன் இந்த நடனக் கலை தொடர்பில் பல மேடை நிகழ்ச்சிகளை படைத்திருக்கிறார்.

ஒடிசி நடனத்தில் புகழ்பெற்றவரும் இந்த நடனத்தின் பூர்வீகம் குறித்து பல ஆராய்ச்சிகள் செய்தவருமான இந்தியாவின் பிரபல ஓடிசி நடனக் கலைஞர்  குரு டாக்டர் கஜேந்திரா பண்டா மலேசியாவுக்கு தற்போது வருகை மேற்கொண்டிருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளாக இந்த நடனத் துறையில் ஈடுபட்டு வரும் அவர், தனது நடனத் துறை வாழ்க்கையின் 50 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடுவதற்காகவும், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்து நடத்தி வரும் தொடர் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாகவும் தனது மாணவர்களுடன் இணைந்து சிறப்பு ஒடிசி நடன நிகழ்ச்சிகளை மலேசிய நடன ஆர்வலர்களுக்காகவும் இரசிகர்களுக்காகவும் படைக்கவிருக்கிறார்.

இந்த ஓடிசி நடன நிகழ்ச்சிகள் குறித்து இந்தியத் தூதரகம் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 13) பிரிக்பீல்ட்சில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தில் நடைபெற்ற சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பில் குரு டாக்டர் கஜேந்திரா பண்டாவும், இந்தியாவுக்கான துணைத் தூதர் மேன்மைமிகு சுபாஷினி நாராயணனும் இந்தியக் கலாச்சார மையத்தின் இயக்குநர் விஜயலட்சுமி சுந்தரராஜனும் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.

#TamilSchoolmychoice

மலேசியாவுடன் 1982-ஆம் ஆண்டு முதல் தான் கொண்டிருக்கும் கலைத் தொடர்புகள் காரணமாக, அதனைக் கொண்டாடும் விதமாக. தனது நடனக்கலைத் துறையின் 50 ஆண்டுகால நிறைவை மலேசியாவில் நடன நிகழ்ச்சிகளைப் படைத்துக் கொண்டாட முடிவு செய்ததாக குரு கஜேந்திர பண்டா பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்த நடன நிகழ்ச்சிகள் முதற்கட்டமாக கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி சுங்கை சிப்புட் நகரில் நடந்தேறின. அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நிகழ்ச்சிகள் கீழ்க்காணும் வகையில் நடைபெறவிருக்கின்றன.

நாள் :        புதன்கிழமை ஆகஸ்ட் 14

இடம்:        கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்திலுள்ள நுண்கலை   
                 ஆலயம், (டெம்பள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்)

நேரம்:        மாலை 7.00 மணி

ஏற்பாடு:     இந்தியத் தூதரகம், கோலாலம்பூர்

நாள் :        வியாழக்கிழமை ஆகஸ்ட் 15

இடம்:         மகா அவதார் கிரியா பாபாஜி ஆசிரமம் கிள்ளான்,
                   எண்: 94A, Lorong Tingkat, Klang

நேரம்:        மாலை 7.00 மணி

ஏற்பாடு:     ஷிரிடி சாய்பாபா சங்கம், மலேசியா

நாள் :        வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 16

இடம்:         Kompleks Warisan Sultan Abu Bakar Yayasan Johor,
                  Lot 888, Jalan Singai Chat, Johor Baru

நேரம்:        மாலை 7.00 மணி

ஏற்பாடு:     சுவர்னா ஃபைன் ஆர்ட்ஸ், ஜோகூர் பாரு