Home இந்தியா தமிழகத்தில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது: அமைச்சர் அந்தோணி

தமிழகத்தில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது: அமைச்சர் அந்தோணி

650
0
SHARE
Ad

Indian-Defence-Minister-A-K-Antonyமே 28- இனிமேல் தமிழகத்தில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோணி (படம்) தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவிலேயே முதன்மை விமானப்படை தளமான தஞ்சை விமானப்படைத்தளத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி இன்று துவக்கி வைத்தார்.

இந்த விமானப்படைத்தளம் சுமார் ரூ. 150 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நிகழ்ச்சிக்குப்பின் நிருபர்களிடம் பேசிய அந்தோணி, தஞ்சை விமானப்படைத்தளம் கடந்த 1984ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

இந்த தளத்தை உருவாக்கும் பணியில் உதவிய தமிழக அரசு மிகவும் உறுதுணையாக செயல்பட்டது. அதற்கு எனது நன்றிகள்.

இங்கு சுகோய் 30 ரக போர் விமானங்கள் மட்டுமல்லாமல், பிற முன்னணி போர்விமானங்களும் நிறுத்தப்படும். எதிர்காலத்தில் இந்த விமானப்படைத் தளத்தை மேலும் விரிவாக்கும் எண்ணமும் உள்ளது.

சட்டீஸ்கரில் இராணுவத்தை களமிறக்கும் எண்ணமும், திட்டமும் இல்லை. போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினரே அங்கு நிலைமைகளை சமாளிப்பர்.

தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, இங்கு இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படமாட்டாது என உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.