Home 13வது பொதுத் தேர்தல் சிலாங்கூர் ஆட்சிக் குழு – முதல் பெண் சட்டமன்ற தலைவராக ஹன்னா இயோ தேர்வு

சிலாங்கூர் ஆட்சிக் குழு – முதல் பெண் சட்டமன்ற தலைவராக ஹன்னா இயோ தேர்வு

529
0
SHARE
Ad

Starசிலாங்கூர், மே 30 – சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் பட்டியலை அம்மாநில மந்திரி பெசாரான அப்துல் காலிட் இப்ராகிம் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதன் படி ஜசெக கட்சியைச் சேர்ந்த ஹன்னா இயோ (சுபாங் ஜெயா) சட்டமன்ற தலைவர் பதவியை பெற்றுள்ளார். மலேசிய வரலாற்றில் முதல் பெண் சட்டமன்ற தலைவராக ஹன்னா(படம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

பிகேஆர் கட்சியைச் சேர்ந்த நிக் நஸ்மி நிக் அகமட்(ஸ்ரீ சித்தியா) சட்டமன்ற துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அதோடு ஆட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள 10 உறுப்பினர்கள் ஏற்கவுள்ள பொறுப்புகளையும் காலிட் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு,

அப்துல் காலிட் இப்ராகிம் (மந்திரி பெசார்) – நிதி,  நில மேம்பாடு, இயற்கைவள மேம்பாடு, மாநிலப் பொருளாதார ஆலோசனைக் குழு, விளம்பரம், மலாய் பாரம்பரிய குழு,

அகமட் யூனுஸ் கைரி (பாஸ் கட்சி) – இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை, உட்கட்டமைப்பு, பொது வசதிகள்

தரோயா அல்வி ( பிகேஆர்  கட்சி) – சுகாதாரம், தொழில்முனைவர் மேம்பாடு, அறிவியல், தொழில் நுட்பம், கண்டுபிடிப்புகள்

இயன் யோங் ஹியான் வா (ஜசெக கட்சி) – முதலீடு, தொழில்மயமாக்கல், வணிகம், கிராமங்களைப் புதுப்பித்தல், சட்டவிரோதமாக இயங்கும் தொழிற்சாலைகளை சட்டப்பூர்வமாக்குதல்

ஹலிமா அலி (பாஸ் கட்சி) – கல்வி மற்றும் உயர்கல்வி, மனித மூலதன வளர்ச்சி

இஸ்கண்டார் அப்துல் சமட் (பாஸ் கட்சி) –  வீடமைப்பு, கட்டிடங்கள் மற்றும் நகர்புற குடியேற்ற நிர்வாகம்.

ரோட்ஸியா இஸ்மாயில் (பிகேஆர் கட்சி) –  பொதுநலம் மற்றும் மகளிர் விவகாரங்கள்

சாலேஹென் முக்யி (பாஸ் கட்சி) – இஸ்லாமிய விவகாரம், விவசாயத்தை நவீனமயமாக்கல், கிராமப்புற வளர்ச்சி

டெங் சாங் கிம் (ஜசெக கட்சி) – உள்நாட்டு அரசாங்கம், ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி

வி.கணபதி ராவ் (ஜசெக கட்சி) – தோட்டப்புறத் தொழிலாளர்கள், வறுமை, பாதுகாப்பு

வோங் கியாட் பிங், எலிசபெத் (பிகேஆர் கட்சி) – சுற்றுலாத்துறை,நுகர்வோர் விவகாரங்கள், சுற்றுச்சூழல்

மேலும் விவரங்கள் தொடரும்…