Home நாடு தர்மேந்திரன் மரணத்தில் சம்பந்தப்பட்டுள்ள நான்காவது அதிகாரியின் புகைப்படத்தை வெளியிடவேண்டும் – லிம் லிப் கோரிக்கை

தர்மேந்திரன் மரணத்தில் சம்பந்தப்பட்டுள்ள நான்காவது அதிகாரியின் புகைப்படத்தை வெளியிடவேண்டும் – லிம் லிப் கோரிக்கை

709
0
SHARE
Ad

image (3)கோலாலம்பூர், ஜூன் 12 – தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட தர்மேந்திரனின் மரணத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கருதப்படும் நான்காவது காவல்துறை அதிகாரியின் படத்தை வெளியிடுமாறு செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் (படம்) இன்று கேட்டுக்கொண்டுள்ளார்.

“கொலை வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கும் 3 நபர்களை கண்டுபிடிக்க, ஷா ஆலம் காவல்துறை செய்தியாளர் கூட்டமொன்றில் அவர்களது புகைப்படங்களை வெளியிட முடிவெடுத்துள்ளது என்று ஓரியண்டல் டெய்லியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது”

“எனவே தர்மேந்திரன் கொலையிலும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கருதப்படும் அந்த நான்காவது காவல்துறை அதிகாரியைக் கண்டுபிடிக்க அவரது புகைப்படத்தை வெளியிட வேண்டும். அப்போது தான் அவரை தேடிக் கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருக்கும்” என்று லிம் லிப் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் “அந்த காவல்துறை அதிகாரி தேடப்படும் நபராகி விட்டதால் அவரது புகைப்படத்தை எல்ல செய்தித்தாள்களிலும் வெளியிடுவதோடு, அனைத்து காவல்நிலையங்களிலும் வைக்க வேண்டும்” என்று லிம் ஜிஞ்சாங் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.