Home வணிகம்/தொழில் நுட்பம் கத்தார் விமான நிலையத்தை நிர்வகிக்கும் குத்தகை மலேசியா ஏர்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது

கத்தார் விமான நிலையத்தை நிர்வகிக்கும் குத்தகை மலேசியா ஏர்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது

476
0
SHARE
Ad

imageஜூன் 22 – மத்திய கிழக்கு நாடான கத்தாரின் தலைநகரான டோஹாவில் உருவாகி வரும் புதிய விமான நிலையத்தை நிர்வாகம் செய்யும் குத்தகைக்கான கடிதத்தை மலேசியா ஏர்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

அந்த விமான நிலையத்தை நிர்வகிக்கும் வசதிகளையும், அதன் இணைக் கட்டிடங்களை நிர்வகிக்கும் பொறுப்பும் மலேசிய ஏர்போர்ட்ஸ் நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பல வெளிநாடுகளில் தனது ஆற்றலை நிரூபித்து வரும் மலேசிய ஏர்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்திருக்கும் இன்னொரு வாய்ப்பு இதுவாகும்.

தனது துணை நிறுவனமான மலேசியா ஏர்போர்ட்ஸ் கொன்சல்டன்சி செர்விசஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இந்த பணிகளை மலேசியா ஏர்போர்ட்ஸ் மேற்கொள்ளும்.

மூன்றாண்டு தவணைக்கான இந்த குத்தகை 83.28 மில்லியன் ரிங்கிட் மதிப்புடையதாகும். மேலும் மூன்றாண்டுகளுக்கு இதனை நீட்டிப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்த புதிய குத்தகையின் மூலம் வெளிநாடுகளில் விமான நிறுவனங்களை உருவாக்குவது, நிர்வகிப்பது போன்ற வர்த்தக வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொள்ள மலேசிய ஏர்போர்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்து பாடுபடும் என அந்த நிறுவனம் கோலாலம்பூர் பங்கு சந்தைக்கு தெரிவித்த அறிக்கையொன்றில் குறிப்ப்பிட்டுள்ளது.

மலேசிய ஏர்போர்ட்ஸ் நிறுவனம் புதிய டோஹா விமான நிலையத்தில் மேற்கொள்ளவிருக்கும் நிர்வாகப் பொறுப்பின் கீழ் பராமரிப்பு சேவைகள், பாதுகாப்பு, தங்குமிடம், கழிவறை சேவைகள் மற்றும் ஏனைய விமான நிலைய சேவைகள் ஆகியவையும் அடங்கும்.

-பெர்னாமா