Home நாடு மோசமாகும் புகைமூட்டம் – நாளை கோலாலம்பூர், சிலாங்கூர் பள்ளிகள் மூடப்படும்

மோசமாகும் புகைமூட்டம் – நாளை கோலாலம்பூர், சிலாங்கூர் பள்ளிகள் மூடப்படும்

549
0
SHARE
Ad

Haze-Featureஜூன் 23 – நாட்டின் சூழ்ந்துள்ள புகைமூட்டம் மேலும் மோசமான நிலையில் நாளை, திங்கட்கிழமை கோலாலம்பூரிலும், சிலாங்கூரிலும் உள்ள பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து சுற்றுச் சூழல் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் மற்றும் இரண்டாவது கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜூசோ ஆகிய இருவரும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 5 மணியளவில் புகைமூட்ட நிலைமை மேலும் மோசமாகியது என்று கூறிய பழனிவேல் சுகாதார காரணங்களுக்காக பள்ளிகள் மூடப்பட உத்தரவிடப்பட்டதாகக் கூறினார்.

முடிந்தவரை பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை வீட்டிற்குள்ளேயே வைத்திருக்கும்படியும் அப்படி வெளியே அழைத்துச் செல்வதாக இருந்தால் முகக் கவசம் அணிந்து கொண்டு செல்லும்படியும் பழனிவேல் அறிவுறுத்தினார்.

நாட்டிலேயே புகைமூட்டத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக மூவார் (ஜோகூர்) திகழ்கின்றது. காற்றுத் தரத்தின் எண்ணிக்கை மூவாரில் இன்று 746ஆக உயர்ந்தது. இது அபாய நிலையை விட இரண்டு மடங்கு கூடுதலாகும்.

அபாய நிலையின் எண்ணிக்கை 301 என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் ஜோகூர் மாநிலத்தில் அவசர நிலையில் முதல் உதவி வாகனங்கள் (ஆம்புலன்ஸ்) மருத்துவமனை வளாகங்களில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் கூட தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இயன்றவரையில் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.