Home நாடு குகன் வழக்கு: தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் மேல்முறையீடு

குகன் வழக்கு: தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் மேல்முறையீடு

540
0
SHARE
Ad

zahidhகோலாலம்பூர், ஜூலை 1 – தடுப்புக் காவலில் இறந்த குகனின் மரணம் குறித்து,காவல்துறை மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக, கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, அரசாங்கமும் தேசிய காவல்துறைத் தலைவர் காலிட் அபு பக்கரும் மேல் முறையீடு செய்யவிருக்கிறார்கள்.

இது குறித்து உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி(படம்) கூறுகையில், “உயர்நீதிமன்ற நீதிபதி வி.டி.சிங்கம் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம். இருப்பினும் மேல்முறையீடு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் காரணம் ஒரு குற்றவாளி மேல் முறையீடு செய்யும் போது அரசாங்கம் ஏன் மேல் முறையீடு செய்ய முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் தோல்வி கண்டால், கூட்டரசு நீதிமன்றத்திற்கு செல்வோம் என்றும் சாஹிட் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட குகன் மர்மமான முறையில் இறந்தார்.

அவரது இறப்புக்கு சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் காலிட் அபு பக்கர் (தற்போதைய தேசிய காவல்துறைத் தலைவர்), காவல்துறை அதிகாரி நவீந்திரன் விவேகானந்தன் மற்றும் சுபாங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஸைனால் ராஷித் அபு பக்கர் ஆகியோர் தான் காரணம் என்று கூறி,கடந்த வாரம் கோலாலம்பூர் உயர்நீதி மன்றம், குகனின் குடுபத்தாருக்கு நஷ்ட ஈடாக 751,700 ரிங்கிட்டும், இவ்வழக்கில் அவர்கள் செய்த செலவுகளுக்காக 50,000 ரிங்கிட்டும் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.