ஜூலை 26- ‘கொலவெறி’ பாடல் மூலம் உலகப் புகழ்பெற்ற தனுஷ், இந்தியில் முதன்முதலாக நடித்த படம் ‘ராஞ்சனா’.
இப்படத்தை ஆனந்த் எல.ராய் இயக்கியிருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார்.
கடந்த ஜூன் 21-ந் தேதி இந்தியிலும், தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் ஜுன் 28-ந் தேதியும் வெளியான முதல் நாளன்றே 5 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருந்தது.
முதல் வாரத்திலேயே ரூ.30 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது. காதல், அரசியல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் வெளியானதால் படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைந்தது.
இந்நிலையில் ‘ராஞ்சனா’ படம் வெளியான மூன்று வாரங்களில் ரூ.100 கோடியை வசூலித்து விட்டதாக இப்படத்தின் தயாரித்த ஈராஸ் இன்டர்நேஷனல்வெற்றி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாலிவுட்டில் இதுவரை தமிழ் நடிகர்கள் யாரும் இதுபோல் வெற்றியடைந்ததில்லை. தனுஷ் இந்த குறையை தீர்த்து வைத்திருக்கிறார்.