Home வாழ் நலம் பின்னோக்கிய நடைபயிற்சியால் கிடைக்கும் நன்மைகள்

பின்னோக்கிய நடைபயிற்சியால் கிடைக்கும் நன்மைகள்

943
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆக. 3- நடைப்பயிற்சி உடலுக்கு வலுவைத் தருவதுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

இன்று நடைப்பயிற்சி செய்பவர்களில் 85 சதவிகிதம் பேர் நோய்களின் பாதிப்புக்கு ஆளானவர்கள். இனி நீங்கள் நடைப்பயிற்சி செய்வதுதான் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவர் அறிவுறுத்திய பிறகுதான் நடைப்பயிற்சி செய்ய ஆரம்பிக்கின்றனர்.

முன்பெல்லாம் மக்கள் தூரத்தில் இருக்கும் இடத்திற்குச் போவதற்கு நடந்தே செல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் அடுத்த தெருவிற்கு செல்வ தென்றால் கூட வாகனத்தை பயன் படுத்துகின்றனர். நடை என்பது பலருக்கு சுத்தமாக மறந்துபோய்விட்டது.

#TamilSchoolmychoice

regular-joggingபொதுவாக அனைவரும் காலையில் 1/2 மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது. அதற்கெல்லாம் நேரமில்லை என்று கூறுவது சோம்பேறித்தனம் தான். நடைப்பயிற்சி செய்யும்போது 10 நிமிடம் பின்னோக்கி அதாவது பின்பக்கமாக சிறிது தூரம் நடப்பது நல்லது.

இவ்வாறு பின்னோக்கி மெதுவாக நடப்பது நல்ல உடற்பயிற்சி செய்வதற்கு சமம். பின்னோக்கி நடப்பதால் முதுகு தண்டுவடப் பகுதி பலம் பெறும். இதனால் முதுகு வலி, தோள் பட்டை வலி நீங்கும். பின்னோக்கி நடக்கும்போது கழுத்துப் பகுதியை அங்கும் இங்கும் திருப்புவதால் கழுத்து வலி நீங்கும்.

start-running-glமேலும் தோள் பிடிப்பு இடுப்புப் பிடிப்பு குறையும். சுவாசம் சீராகும். இரத்த ஓட்டம் சீராகும். மன அழுத்தம் குறையும். தொடை, கால்களில் உண்டாகும் வலி நீங்கும். கால் பாதங்களில் இரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதால், பாதங்களில் உள்ள வர்மப் புள்ளிகள் தூண்டப்படுகிறது.

இதனால் உடல் புத்துணர்வு பெறுகிறது. உடலில் வியர்வை நன்கு வெளியேறும். மேலும் உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வெளியேறும். சர்க்கரை நோயின் பாதிப்புள்ளவர்களுக்கு பின்னோக்கிய நடையினால் உடல் புத்துணர்வு பெறும்.

தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்யும்போது சிறிது நேரம் பின்னோக்கி நடந்து வந்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.