Home நாடு 12 வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் செயலிகளின் அரங்கம்!

12 வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் செயலிகளின் அரங்கம்!

1002
0
SHARE
Ad

Untitled-1

கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 – உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு, மலேசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்தும் 12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டில், உலகப் புகழ் பெற்ற தமிழ் செயலிகளான முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் ஆகியவற்றின் பயன்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் கண்காட்சி அரங்கம் அமைக்கப்படவுள்ளது.

அதில் மிகவும் எளிமையான, மேம்பட்ட தமிழ் உள்ளீட்டு முறைமையான முரசு அஞ்சல் குறித்தும், கையடக்கக் கருவிகளில் செல்லினத்தைப் பயன்படுத்தி எவ்வாறு எளிதான வகையில் குறுஞ்செய்திகளை தமிழில் உள்ளிடுவது குறித்தும், நடப்பு செய்திகளை உடனுக்குடன் உங்கள் கையடக்கக் கருவிகளில் வழங்கும் செல்லியல் செயலி குறித்தும் விளக்கமளிக்கப்படும்.

#TamilSchoolmychoice

இது வரை எட்டு மாநாடுகளை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, இந்தியா ஆகிய நாடுகளில் முன்னணிப் பல்கலைக் கழகங்களோடு இணைந்தும், தமிழகத்தில் மூன்று மாநாடுகளை தமிழக அரசின் முழு ஆதரவோடும் உத்தமம் நடத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

முந்தைய இணைய மாநாடுகளைப் போலவே வரும் 2013 மாநாடும் கருத்தரங்கு, கண்காட்சி, மக்கள் கூடம் என்று மூன்று முனைகளில் செயல்படும்.

ஆய்வுக் கருத்தரங்கு மற்றும் பயிலரங்கு ஆகஸ்டு 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களில் நடக்கவிருக்கிறது. கண்காட்சியும் மக்கள் கூடமும் ஆகஸ்டு 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் நடக்கும்.

மாநாட்டுக்குப் பதிவு செய்த பேராளர்கள் மட்டுமே கருத்தரங்கு மற்றும் பயிலரங்கில் கலந்து கொள்ளலாம். கண்காட்சியிலும் மக்கள்கூடத்திலும் பொதுமக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம்.

கருத்தரங்குகளில் பல்வேறு ஆய்வாளர்கள் கணினித் தமிழ் குறித்த தங்களின் ஆய்வுகளை ஏனைய ஆய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.