ஆக. 27- ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் ‘கோச்சடையான்’.
இந்த படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குகிறார். முதன்முறையாக ‘மோஷன் கேப்சர்’ என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது.
இப்படத்தின் ‘கிராபிக்ஸ்’ காட்சிகளுக்காக ரொம்பவும் மெனக்கெட்டு வருகிறார்கள். ஹாலிவுட்டில் தயாரான ‘அவதார்’ படத்தைப் போல இந்த படத்திலும் ‘விஷுவல் எபக்ட்ஸ்’ பயங்கரமாக இருக்கும் என்கிறார்கள்.
இப்படத்தின் பின்னணி இசையை லண்டனில் உள்ள ஸ்டுடியோவில் முடித்துவிட்டார் ஏ.ஆர்.ரகுமான. தமிழ், ஆங்கிலம் உள்பட பல்வேறு மொழிகளிலும் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த படம் தெலுங்கில் ‘விக்ரமசிம்ஹா’ என்ற பெயரில் வெளிவர உள்ளதாம்.
அதற்கான மொழிமாற்ற பணிகளில் தற்போது இந்த படக்குழு களமிறங்கியுள்ளதாம். விரைவில் படத்தை வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.
இப்படம் ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.