Home கலை உலகம் 32 ஆண்டுகளுக்கு பிறகு அமிதாப் பச்சன்– ரேகா ஜோடி சேரும் படம்

32 ஆண்டுகளுக்கு பிறகு அமிதாப் பச்சன்– ரேகா ஜோடி சேரும் படம்

720
0
SHARE
Ad

செப். 2- 32 ஆண்டுகளுக்கு பிறகு அமிதாப்பச்சனும், ரேகாவும் ஜோடியாக சேர்ந்து நடிக்கிறார்கள்.

அமிதாப்பச்சன் இந்திப்பட உலகில் கொடிகட்டி பறந்த காலத்தில் 1976 முதல் 81–ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளாக ஜோடி சேர்ந்து நடித்தவர் ரேகா.

amitabh-rekha-affair-7_092812051127இந்த ஜோடி நடித்த தோ அஞ்சானே (76), முக்கந்தர்கா சிக்கந்தர் (78), மிஸ்டர் நட்வர்லால் (79), சுகாக் (79), சில்சிலா (81) ஆகிய படங்கள் அதிக வெற்றிப்பெற்ற படங்களாகும்.

#TamilSchoolmychoice

இந்த ஆண்டு காலத்தில் இவர்கள் இருவரையும் இணைத்து பேசப்பட்டது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்காமல் பிரிந்துவிட்டனர். இப்போது 32 ஆண்டுகளுக்கு பிறகு அமிதாப்பச்சனும், ரேகாவும் இணைந்து நடிக்கிறார்கள்.

இயக்குனர் அனீஸ் ‘வெல்கம் பேக்’ என்ற பெயரில் நகைச்சுவை படம் எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் அமிதாப்பச்சனுடன் நடிகை ரேகாவையும் இணைத்து நடிக்க வைக்க பேச்சு நடக்கிறது.

rekha-amitabh-story-1_101012011759இந்த படத்தில் ஆர்.டி.எக்ஸ் கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார். இதில் வசதி படைத்த ஆடை வடிவமைப்பாளராக ரேகா. இதில் இருவரும் காதலிப்பது போல் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி இயக்குனர் அனீஸ் கூறுகையில், நான் ரேகாவின் தீவிர ரசிகன். அவருடன் பணியாற்ற விரும்புகிறேன்.

அவருக்கு இந்த படத்தில் நகைச்சுவை பாத்திரம். அவர் அதை சிறப்பாக செய்வார் என்றார். இந்த படத்தில் ஜான் ஆபிரகாம், நடிகை ஸ்ருதிஹாசன், நானா படேகர், அனில் கபூர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.