Home கலை உலகம் கன்னடத்தில் கால் பதிக்கும் வரலட்சுமி

கன்னடத்தில் கால் பதிக்கும் வரலட்சுமி

494
0
SHARE
Ad

செப். 2- சிம்புவுடன் ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் வரலட்சுமி.

முதல் படத்திலேயே அதிரடி கவர்ச்சி காட்டியும், சொந்த குரலில் பேசியும் அசத்தியிருந்தார்.

Actress_varalakshmi_sarathkumar_Hot_Photos_Stills_in_Podaa_Podi_13இப்படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய படங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் இருந்தவருக்கு விஷாலுடன் ‘மதகஜராஜா’ என்ற படம் மட்டுமே கிடைத்தது.

#TamilSchoolmychoice

இப்படத்தில் இரண்டாவது கதாநாயகிதான் என்றாலும், முதல் படத்தைப் போன்றே இந்த படத்திலும் தனது நடிப்பை திறமையாக வெளிப்படுத்தியுள்ளாராம். விஷாலுடன் இணைந்து அதிரடி நடனமும் ஆடியிருக்கிறாராம்.

varalakshmi_sarathkumar_imageஇந்நிலையில், தற்போது ‘நான் ஈ’ படத்தில் நடித்த சுதீப் நடிக்கும் கன்னட படமொன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க வரலட்சுமி தேர்வாகியுள்ளாராம். இப்படம் தெலுங்கில் பிரபாஷ், அனுஷ்கா, ரிச்சா ஆகியோர் நடித்து வெளியான ‘மிர்ச்சி’ என்ற படத்தின் மறுபதிவுதான்.

கன்னடத்திலும் அனுஷ்கா, ரிச்சா ஆகியோர் நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தும், அனுஷ்கா கதாபாத்திரத்தில் வேறொரு நடிகை நடிக்கிறபோது அது புதுமாதிரியாக இருக்கும் என்று சொல்லியே வரலட்சுமியை ஒப்பந்தம் செய்தாராம் சுதீப்.