Home கலை உலகம் த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம்

த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம்

610
0
SHARE
Ad

rana-trisha300செப். 4- த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் மாப்பிள்ளை தெலுங்கு நடிகர் ராணா என்றும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

த்ரிஷாவின் சம காலத்து நடிகைகளான சிம்ரன், ஜோதிகா, லைலா, ரம்பா, மீனா போன்றோர் திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என  வாழ்க்கையை அமைத்து கொண்டனர்.

ஆனால் த்ரிஷாவுக்கு முப்பது வயது கடந்த பிறகும் இன்னும் திருமணம் நடக்கவில்லை. திரிஷா தாய் உமா கிருஷ்ணன் விரைவில் திருமணம் நடத்தி விட அவசரப்படுகிறார்.

#TamilSchoolmychoice

tamil-actress-telugu-actor-rana-daggubati-with-trisha-krishnan-photo-shoot11த்ரிஷாவுக்கு இப்போது படங்களும் இல்லை. முன்னணி  கதாநாயகர்கள் புதுவரவுகளான இளம் நாயகிகளுடன் ஜோடி சேரவே விரும்புகிறார்கள்.

எனவே த்ரிஷாவும் திருமணத்துக்கு சம்மதித்துள்ளாராம். தெலுங்கு நடிகர் ராணாவை திருமணம் செய்து கொள்ள அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. நண்பர்களாகத்தான் பழகுகிறோம் என்று அதற்கு பதில் அளித்தார்கள். ஆனால் அது உண்மையல்ல என்றும் காதலிப்பது உறுதி என்றும் தற்போது தெரிய வந்துள்ளது.

Telugu-Media-Tசமீபத்தில் சென்னையில் நடந்த ஜெயம்ரவி உறவினர் வீட்டு திருமணத்துக்கு த்ரிஷாவும், ராணாவும் கைகோர்த்தபடி வந்து பரபரப்பு ஏற்படுத்தினார்கள்.

திருமண கூட்டத்தினர் அவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்தனர். ஐதராபாத்தில் த்ரிஷா தந்தை இறந்தபோது த்ரிஷா கூடவே ராணா இருந்தார். பட விழாவுகளுக்கும் ஜோடியாக போனார்கள்.

ராணா வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் திருமணத்துக்கு தாமதம் ஆனதாகவும் இப்போது அவர்கள் சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

எனவே ஒரு சில மாதங்களில் த்ரிஷா–ராணா திருமணம் நடக்கும் என நெருக்கமானவர்கள் கூறினர்.