Home இந்தியா கேரளாவில் சோனியா காந்தி 2 நாள் சுற்றுப்பயணம்

கேரளாவில் சோனியா காந்தி 2 நாள் சுற்றுப்பயணம்

514
0
SHARE
Ad

திருவனந்தபுரம், செப்.20- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2 நாள் பயணமாக கேரள மாநிலத்திற்கு 29-ந்தேதி செல்கிறார்.

sonia-gandhiநெய்யூரில் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ராஜீவ் காந்தி மேம்பாட்டு கல்வி நிறுவனத்தை அவர் திறந்து வைக்கிறார்.

மேலும், நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்கும் திட்டத்தையும் சோனியா காந்தி தொடங்கி வைக்கிறார். பின்னர், கட்சியின் மாநில நிர்வாகிகளை சோனியா காந்தி சந்தித்து பேசுகிறார்.

#TamilSchoolmychoice

இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், கேரளாவில் கட்சியை பலப்படுத்துவது குறித்து சோனியாகாந்தி ஆலோசனை நடத்துகிறார். இதனால் சோனியாகாந்தியின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, கொல்லம் மாவட்டத்தில் உள்ள மாதா அமிர்தானந்தமயி ஆசிரமத்தில் 26-ந்தேதி நடைபெறும் தனது பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்கிறார்.

அதன்பின்னர் சோனியாகாந்தி கேரளா செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.