Home உலகம் சவுதி: ‘ஹெராயின்’ கடத்தி வந்த பாகிஸ்தான் ஆசாமி தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்

சவுதி: ‘ஹெராயின்’ கடத்தி வந்த பாகிஸ்தான் ஆசாமி தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்

576
0
SHARE
Ad

SAUDI-UN/

ரியாத், நவ 7- இஸ்லாமிய சட்ட திட்டங்களின்படி ஆட்சி செய்வதாக கூறி வரும் சவுதி அரேபியா நாட்டில் கற்பழிப்பு, கொலை, ஆயுதமேந்திய கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் போன்றவை கடும் குற்றங்களாக கருதப்படுகிறது. இதுபோன்று குற்ற செயல்களில் ஈடுபடுவோரின் தலையை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

இவ்வகையில், கடந்த ஆண்டு மட்டும் 76 குற்றவாளிகள் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், ஏராளமான ஹெராயின் எனப்படும் போதைப்பொருளை சவுதி அரேபியாவுக்கு கடத்தி வந்த பாகிஸ்தானியர் ஜாபர் குலாம் அலி கான் என்பவனுக்கு நேற்று தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி அரசு அறிவித்துள்ளது.

இவனுடன் சேர்த்து இந்த ஆண்டில் இதுவரை 71 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.