Home 13வது பொதுத் தேர்தல் மசீச தேர்தல்: புதிய தேசியத்தலைவராக லியாவ் தியாங் லாய் தேர்வு!

மசீச தேர்தல்: புதிய தேசியத்தலைவராக லியாவ் தியாங் லாய் தேர்வு!

1006
0
SHARE
Ad

liow-tiong-lai5-june7_400_267_100கோலாலம்பூர், டிச 21 (கூடுதல் செய்தி)– இன்று நடைபெற்ற மசீச கட்சித் தேர்தலில், அக்கட்சியின் புதிய தேசியத் தலைவராக லியாவ் தியாங் லாய்(படம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தேசியத் துணைத்தலைவராக டத்தோ டாக்டர் வீ கா சியாங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் நான்கு உதவித்தலைவர் பதவிகளுக்கு டத்தோ லீ சீ லியாங், டத்தோ டாக்டர் ஹவ் கோக் சங், டத்தோ சுவா டி யாங் மற்றும் டத்தின் படுகா சியு மெய் பன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களில் லியாவ் 1,186 வாக்குகளும், கான் பிங் சியாவ் 1,000 வாக்குகளும், டத்தோஸ்ரீ ஆங் டி கியாட் 160 வாக்குகளும் பெற்றனர்.

அதே போல், துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களில் டாக்டர் வீ கா சியாங் 1,408 வாக்குகளும், டத்தோ டொனால்டு லிம் சியாங் சாய் 927 வாக்குகளும் பெற்றனர்.

வெற்றிபெற்ற நான்கு  உதவித்தலைவர்களில் லீ 1,642 வாக்குகளும், டாக்டர் ஹவ் 1,475 வாக்குகளும், சுவா 1,343 வாக்குகளும் மற்றும் சியு 1,230 வாக்குகளும் பெற்றனர்.