Home நாடு பகாங் சுல்தான் பிறந்தநாள்: வேள்பாரிக்கு ‘டத்தோஸ்ரீ’ விருது!

பகாங் சுல்தான் பிறந்தநாள்: வேள்பாரிக்கு ‘டத்தோஸ்ரீ’ விருது!

587
0
SHARE
Ad

Vell-Paariகுவாந்தான், டிச 27 – மேன்மை தங்கிய பகாங் சுல்தான் அமாட் ஷாவின் 83 வது பிறந்தநாளை முன்னிட்டு, நாட்டின் 180 முக்கியப் பிரமுகர்கள் நேற்று விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதில் 13 பேருக்கு டத்தோஸ்ரீ விருதும், 114 பேருக்கு டி.ஐ.எம்.பி எனும் டத்தோ விருதும் வழங்கப்பட்டது.

குறிப்பிடத்தக்க பிரமுகர்களான ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் ஜி.குமார் அம்மான், தமிழ் நேசன் நாளிதழலின் நிர்வாக இயக்குநர் வேள்பாரி, தொழிலதிபரும் திரைப்பட நடிகருமான ஆர்.கே என்ற ராதாகிருஷ்ணன் ஆகியோர் விருது பெற்றனர்.

#TamilSchoolmychoice

இதில் ஜி.குமார் மற்றும் ஆர்கே ஆகிய இருவருக்கும் டத்தோ விருது கிடைத்தது.

வேள்பாரிக்கு டத்தோஸ்ரீ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.