புதுடெல்லி, பிப்ரவரி 16 – டில்லியின் அதிரடி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பதவி விலகியதைத் தொடர்ந்து, டில்லி சட்டமன்றத்திற்கு மறு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அதிரடியாக, டெல்லி கவர்னர் பரிந்துரையை ஏற்று அதிபர் ஆட்சியை அமல்படுத்தமத்திய அரசாங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் கெஜ்ரிவாலின் மறு தேர்தலுக்கான கோரிக்கைநிராகரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலோடு டில்லி சட்டமன்றத்திற்கான தேர்தலும் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காதநிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மிகட்சி அரசு அமைத்தது.
48 நாள் மட்டுமே நீடித்த கெஜ்ரிவால் அரசு, அதன் ஜனலோக்பால் சட்டம் சட்டமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பதவி விலகியது.
அத்துடன், டெல்லி சட்டசபையை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற பரிந்துரையையும்கெஜ்ரிவால் அரசு அளித்தது.
சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கெஜ்ரிவால்அரசின் பரிந்துரையை கவர்னர் நஜீப் ஜங் நிராகரித்து விட்டார். டெல்லிசட்டசபையை முடக்கிவிட்டு, அதிபர் ஆட்சியை அமல்படுத்த அவர் பரிந்துரைசெய்துள்ளார்.
கவர்னர் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட மத்திய அரசாங்க அமைச்சரவைடெல்லியில் அதிபர் ஆட்சியைஅமல்படுத்த அதிபருக்கு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளது.