Home இந்தியா காவலர்கள் தற்கொலை எண்ணிக்கையில் முதல் இடம் வகிக்கிறது தமிழகம்!

காவலர்கள் தற்கொலை எண்ணிக்கையில் முதல் இடம் வகிக்கிறது தமிழகம்!

677
0
SHARE
Ad

24-1393244436-tamil-nadu-police423-600சென்னை, பிப் 25 – சென்னையில் குழந்தையில்லை என்ற காரணத்திற்காக இளம் பெண் காவலர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குமரன் நகர் குற்றப்பிரிவு காவலில் பெண் காவலராக பணியாற்றியவர் புவனேஸ்வரி (வயது 26). சென்னை ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பில் வசித்தார்.

இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. கணவர் பெயர் சேகர்.

#TamilSchoolmychoice

அவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. நேற்று இரவு 8.30 மணி அளவில், வீட்டில் தனியாக இருந்த புவனேஸ்வரி, திடீரென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து விட்டார். சற்று நேரத்தில் வீட்டுக்குள்ளேயே உடல் கருகி இறந்து விட்டார்.

இவர் மட்டுமல்ல இந்தியாவில் காவலர் தற்கொலை எண்ணிக்கையில் முதல் இடம் வகிக்கிறது தமிழகம். கடந்த 2012ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 58 காவலர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கிறது புள்ளிவிபரம்.

இந்திய அளவில் காவல்துறையில் நிகழும் தற்கொலைகள், மரணங்கள் குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி 2012ல் தமிழகத்தில் மட்டும் 280 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் 58 தற்கொலைகள். இந்த எண்ணிக்கை 2011 -ஆம் ஆண்டைவிட 50% அதிகம்.  நாடுமுழுவதும் 821 காவலர்கள் பணியின்போதே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கிறது தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரம்.