Home நாடு அன்வாருக்குத் தெரியாமல் சிலாங்கூர் மந்திரி பெசாரும் புத்ரா ஜெயாவும் ஒப்பந்தமா?

அன்வாருக்குத் தெரியாமல் சிலாங்கூர் மந்திரி பெசாரும் புத்ரா ஜெயாவும் ஒப்பந்தமா?

553
0
SHARE
Ad

anwar-ibrahimபுத்ரா ஜெயா, பிப்ரவரி 26 – மலேசிய அரசியலில் எதிர்பாராத திருப்பு முனையாக இன்று, சிலாங்கூர் மாநில அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் தண்ணீர் பங்கீடு தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் அரசாங்கத்தின் சார்பில் அதன் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

காஜாங் இடைத் தேர்தலை நோக்கி இரண்டு அரசியல் அணிகளும் மோதுவதற்கு தயாராகி வரும் பரபரப்பான, இக்கட்டான சூழ்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் காலிட் இப்ராகிம் கையெழுத்திட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பலரது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக, இந்த ஒப்பந்தம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என அன்வார் இப்ராகிமும், மற்றொரு பிகேஆர் தலைவரான அதன் வியூக இயக்குநர் ரபிசி ரம்லியும் கூறியிருப்பதும் பிகேஆர் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்துள்ளது.

“இதற்கு முந்தைய ஒப்பந்தங்கள் குறித்து எனக்கு விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. ஆனால் இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனவே, எனது கருத்துக்களை வெளியிட நான் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது” என காஜாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபோது அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

கொள்கை ரீதியாக அத்தகைய ஒப்பந்தம் காணப்படுவது குறித்து தான் உடன்படுவதாகக் கூறிய அன்வார், தனக்கு போதிய விவரங்கள் கிடைக்கும் வரை தன்னால் எதுவும் கூற இயலாது என்று கூறினார்.

அதே வேளையில், பிகேஆர் கட்சியின் வியூக இயக்குநரான ரபிசி ரம்லியும் தங்களுக்கு இந்த ஒப்பந்தம் குறித்த எந்தவித விவரங்களும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

 ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மலேசியகினிக்கு அறிவிப்பு

தற்கிடையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் நிகழ்வுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகத்தான் தங்களுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் தெரிவித்ததாக மலேசிய கினி செய்தி இணையத் தளம் தெரிவித்தது.