Home நாடு விண்ணப்பங்களில் ‘இனம்’ அகற்றும் பரிந்துரைக்கு பெர்காசா மறுப்பு!

விண்ணப்பங்களில் ‘இனம்’ அகற்றும் பரிந்துரைக்கு பெர்காசா மறுப்பு!

634
0
SHARE
Ad

ibrahim-aliகோலாலம்பூர், மார்ச் 1 – அதிகாரப்பூர்வ விண்ணப்பங்களில் ஒருவருடைய இனத்தை குறிப்பிடுவதை அகற்ற வேண்டும் என்ற பரிந்துரைக்கு பெர்காசா மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறுகையில், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் விண்ணப்பங்களில் இனத்தை குறிப்பிடுவது இன்னும் நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் ஒருவர் தனது சாதியை கூட குறிப்பிடும் வழக்கம் உள்ளது என்று தெரிவித்தார்.

அதை அகற்றினால், புள்ளியல் துறையின் கணக்கெடுப்பு பணிகளுக்கு அவை சிக்கலாக அமைந்து விடும் என்றும் இப்ராகிம் அலி குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

பிரதமர் துறை அமைச்சர் ஜோசப் குரூப் அண்மையில் நடந்த ஒற்றுமை குறித்த கருத்தரங்கில் பேசுகையில், இனத்தை குறிப்பிடும் நடைமுறை வழக்கத்தை மாற்றும் நிலை வந்துவிட்டது என்று தெரிவித்தார்.ஆனால் அவரது கருத்து கடும் சர்ச்சைக்குள்ளானது.

அவரது பரிந்துரைக்கு ம.இ.கா சார்பில் மட்டுமே ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

ம.இ.கா கட்சியின் துணைத்தலைவர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறுகையில், இந்த நடவடிக்கையால் நாட்டின் மீது உள்ள தேசப்பற்று மட்டும் உயராது. நாட்டின் மீது மக்களுக்கு அன்பும் ஒற்றுமையும் நிலவும் என்று தெரிவித்தார்.