Home உலகம் 2020 -ல் சூரியனுக்கு ஆதித்யா செயற்கை கோள் – இஸ்ரோ திட்டம்!

2020 -ல் சூரியனுக்கு ஆதித்யா செயற்கை கோள் – இஸ்ரோ திட்டம்!

1105
0
SHARE
Ad

589ae198-422b-4abe-9889-f130026acec6_S_secvpfசென்னை, மார் 1 – வரும் 2020-ஆம் ஆண்டில் சூரியனுக்கு செயற்கைக்கோள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது,

வரும் 2017 முதல் 2020-ஆம் ஆண்டிற்குள் ஆதித்யா என்ற பெயரில் சூரியனுக்கு செயற்கை கோள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாகஇரண்டாம் கட்டமாக சந்திராயன்-2 செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டு அவை நிலவில் தரையிறங்க வைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில் ஜி.எஸ்.எல்.வியின் திறனை மேம்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2014 முதல் 2017-ஆம் ஆண்டிற்குள் நான்கு டன் அளவு அதிகரிக்கப்படவுள்ளது. தொடர்ந்து 2020-ஆம் ஆண்டிற்குள் மேலும் ஆறு முதல் 10 டன் அளவு திறனை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தேசிழய பேரிடர் தடுப்பது குறித்து கையாள்வதற்காக அனுப்பப்பட்ட கல்பனா, இன்சாட் 3-டி செயற்கைக்கோள் மிகவும் உதவிக்கரமாக செயல்பட்டு வருகிறது. அவை அனுப்பிய 400-க்கும் மேற்பட்ட புகைபடங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என கூறினார்.

இந்திய பகுதிகள் குறித்து ஆராய்வதற்காக அனுப்பப்படவுள்ள ஐ.ஆர். என்.எஸ்.எஸ்1-பி வகை செயற்கைக்கோள்கள் அமெரிக்காவின் குளோபல் பொசிசன் முறைக்கு நிகரானதாக அமையும் என தெரிவித்தார்.

மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கல்யான் செயற்கைக்கோள் திட்டமிட்டபடி சரியானபாதையி் செல்வதாகவும் , அதன் மொத்த பயண தூரமான 680 மில்லியன் கி.மீ தூரத்தில் தற்போது மூன்றில் ஒருபங்கு தூரத்தை கடந்து இருப்பதாகவும் தெரிவித்தார் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன்.