Home உலகம் அமெரிக்காவை அச்சுறுத்தும் பனிப்புயல்!

அமெரிக்காவை அச்சுறுத்தும் பனிப்புயல்!

543
0
SHARE
Ad

turnpike-crashநியூயார்க், மார்ச் 7 – தாமதமாக ஆரம்பித்திருக்கும் மார்ச் மாத பனிக்காலம், இயற்கை சூழலின் திடீர் மாற்றங்களை காட்டுகிறதோ என்று ஆராய்ச்சியாளர்களை சிந்திக்க தூண்டியுள்ளது. துருவப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பருவச்சூழ்நிலை மாற்றங்கள் ரஷ்யா மற்றும் மத்திய ஐரோப்பாவில் பனிப்புயலை உண்டாக்கியது.

இம்முறை இதையொட்டி அமெரிக்காவின் குளிர்கால தாக்கம் தொடங்கியுள்ளது என பருவச்சூழல் ஆராய்ச்சியாளர் ஜிம் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார். இயற்கை சூழலுக்கு பொருந்தாத இந்த பனிப்பொழிவு பலமுறை அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகிறது.

நியூயார்க்கில் கடந்த 1888-ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகக்கடுமையான பனிப்புயல் மொத்த கிழக்கு கடற்கரை பகுதியையே உலுக்கிவிட்டது. தொடர்ச்சியான மழை, பனி, மற்றும் அதிமான குளிர் மக்களை வாட்டி எடுத்தது. இப்பணிப்புயலில் சுமார் 400 பேர் AMERICAஉயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

மார்ச் மாத இடைப்பகுதியில் நியூயார்க் பகுதி முழுவதும் சமன்படுத்தி காணப்பட்ட பனிப்புயல் 1894-ஆம் ஆண்டு ஏற்பட்டது. மிக பரந்த புயலான இது அமெரிக்கா முழுவதும் துடைத்து சென்றது. ரயில் போக்குவரத்து காலவரையன்றி நிறுத்தப்பட்டது. 36 மணி நேரங்களுக்கு நீடித்த மிக கடுமையான பனிப்புயல் இதுவாக கருதப்பட்டது. இந்த பனிப்புயலால் தொலைத்தொடர்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.

சிக்காகோவில் 19 அடிக்கு ஏற்பட்ட பனிப்புயலால் நகரமே பனியால் மூடப்பட்டது. இரண்டு நாட்கள் நீடித்த இந்த புயலால் மேகம் சூழ் நகரமாக மாற்றியது அமெரிக்காவை.இந்த புயலால் நான்கு பேர் உயிரிழந்தனர்.புயலுக்கு பிறகு தெருக்களை சுத்தம் செய்ய மட்டும் 10,000 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Evening-Tamil-News-Paper_69762384892மார்ச் 21-ஆம் நாள் பனி மழையுடன் துவங்கியது இப்புயல். சுற்றிலும் பனி மட்டும்தான் சூழ்ந்திருந்தது. ஃபாக்ஸ் தொலைக்காட்சி செய்திப்படி இந்த புயல் 21 மணி நேரத்திற்கு நீடித்திருந்தது. அமெரிக்காவின் வட மாகாணங்களில் ஏற்பட்ட இப்புயல் மிக கடுமையான காற்றுடன் கூடியதாக இருந்தது. 40 அடி அளவிற்கு பனியானது பதிவாகி இருந்தது. மிக கடுமையான இந்த புயலால் 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.