Home உலகம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் எச்சரிக்கை!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் எச்சரிக்கை!

461
0
SHARE
Ad

Barack-Obama-005-640x330வாஷிங்டன், மார்ச் 7 – இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக நிலவும் பிரச்சனைகளை சுமூகமாக பேசி தீர்க்க அமெரிக்கா முயன்று வருகிறது. விரைவில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாஹூ சந்தித்து பேச இருக்கிறார்.

இதற்கிடையே இஸ்ரேல் அமைச்சர் இஸ்ரேல் அரசாங்கம் அமைதி ஏற்பட விரும்புகிறது.ஆனால், யூதர்கள் பகுதியில் இடர்பாடுக்கு அழுத்தம் கொடுப்பதை ஏற்க மாட்டோம்  என்று கூறியுள்ளார்.  இந்நிலையில் சமரச பேச்சுவார்த்தை தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில், சமரச பேச்சுவார்த்தை தோல்விகண்டு சர்வதேச நாடுகள் இஸ்ரேலை புறக்கணிக்கும் முடிவை எடுத்தால் அமெரிக்காவினால் குறைந்தளவு மட்டுமே பாதுகாப்பு தர இயலும். ஆகவே சமரச பேச்சு மூலம் உடன்பாடு முழுவடிவம் பெற ஒத்துழைப்புக் கொடுங்கள் என்று வலியுறுத்தியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா.