மும்பை, மார்ச் 11 – பாலிவுட் நடிகர் அமீர்கான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘சத்ய மேவ ஜயதே‘ என்ற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் குடும்ப பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை, பெண் சிசுக்கொலை உள்ளிட்ட சமூக பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பெண் கற்பழிப்பு தொடர்பாக விவாதம் நடந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சமூக அமைப்பிடம் நடிகர் அமீர்கான் பணம் வசூல் செய்து, அந்த பணத்தை மஸ்ஜித் பகுதியில் மசூதி கட்டவும், முஸ்லிம் இளைஞர்களின் நலனுக்காக வழங்கியதாவும் பேஸ்புக் சமூக வலை தளத்தில் தகவல் வெளியானது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் அமீர்கான் நேற்று முன்தினம் மும்பை காவல்ததுறை ஆணையரிடம் ராகேஷ் மரியாவை சந்தித்து தன்னை பற்றி அவதூறாக பேஸ்புக்கில் செய்தி வெளியிட்ட நபரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு கொடுத்தார். அப்போது இந்த பிரச்சனையில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை ஆணையர் ராகேஷ் மரியா உறுதியளித்தார்.