Home இந்தியா நாடாளுமன்ற முதல் கட்டத் தேர்தலுக்கு இன்று வேட்புமனுத் தாக்கல்!

நாடாளுமன்ற முதல் கட்டத் தேர்தலுக்கு இன்று வேட்புமனுத் தாக்கல்!

419
0
SHARE
Ad

Tamil_Daily_News_509279967டெல்லி, மார்ச் 14 – ஒன்பது கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. முதல் கட்டத் தேர்தலில் அசாம் மாநிலத்தின் ஐந்து தொகுதிகளுக்கும், திரிபுரா மாநிலத்தின் ஒரு தொகுதிக்கும்  ஏப்ரல் 7-ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ளது.

இதை முன்னிட்டு இந்த ஆறு தொகுதிகளுக்கும் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. 21-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2 மற்றும் 3-வது கட்ட தேர்தல் நடைபெறவுள்ள 93 தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பமாகிறது. குறிப்பாக மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் உள்ள தலா ஒரே ஒரு மக்களவைத் தொகுதிக்கும் நாளை வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது.

#TamilSchoolmychoice

கேரளா,ஹரியானா மாநிலங்களில் அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பமாகிறது. இந்த இரு மாநிலங்களிலும் ஏப்ரல் 10-ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. மூன்றாம் கட்டம் தேர்தல் நடைபெறவுள்ள பீகார், உத்திரப்பிரதேசம், ஹிமாச்சலப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சில தொகுதிகளுக்கும் வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பமாகிறது.