Home நாடு தெலுங்கு வம்சாவளியினருக்கு செல்லியலின் ‘உகாதி சுபகாஞ்சலு’ தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துகள்!

தெலுங்கு வம்சாவளியினருக்கு செல்லியலின் ‘உகாதி சுபகாஞ்சலு’ தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துகள்!

1120
0
SHARE
Ad

Ugadi 2014 Images dishesமார்ச் 31 – இன்று தெலுங்கு புத்தாண்டைச் சிறப்புறக் கொண்டாடி மகிழும் உலகெங்கிலும் உள்ள தெலுங்கு வம்சாவளியினருக்கும், தெலுங்கு வாசகர்களுக்கும் செல்லியல் குழுமம் சார்பாக புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.  

#TamilSchoolmychoice

மலேசியாவில் நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற அடையாளத்தோடு வாழ்ந்து வந்தாலும், தெலுங்கு வம்சாவளியினர் தனித்துவமிக்க கலாச்சாரப் பின்னணிகளையும், மொழி அடையாளத்தையும் கொண்டவர்களாவர். அவர்களின் முக்கிய பெருநாட்களில் ஒன்றான தெலுங்குப் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுகின்றது.

உகாதி தெலுங்குப் புத்தாண்டை முன்னிட்டு மலேசியப் பிரதமர் நஜிப்பும் தனது புத்தாண்டு வாழ்த்துகளை தெலுங்கு வம்சாவளியினருக்கு தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தெலுங்கு மக்கள் சுமார் 3 இலட்சம் பேர் மலேசியாவில் வசிப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களுக்கு தெலுங்குப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ள பிரதமர் நஜிப், தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், புத்தாண்டை வரவேற்கும் அதே தருணத்தில், நமது எண்ணங்களிலும், பிரார்த்தனைகளிலும், காணாமல் போன மாஸ் விமானத்தின் பயணிகளையும், அந்த விமானத்தின் ஊழியர்களையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.