Home நாடு MH370: நஜிப் தேடும் பணிகளைப் பார்வையிட ஆஸ்திரேலியா செல்கிறார்!

MH370: நஜிப் தேடும் பணிகளைப் பார்வையிட ஆஸ்திரேலியா செல்கிறார்!

519
0
SHARE
Ad

MH370 SEARCHகோலாலம்பூர், ஏப்ரல் 1- மாயமான MH370 மலேசிய விமானத்தைத் தேடும் அனைத்துலக நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட பிரதமர் நஜிப் துன் ரசாக் நாளை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்குச் செல்கிறார்.

இது குறித்து இடைக்காலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் நாளை பெர்த் நகருக்கு சென்று அங்கு ‘பியர்ஸ்’ ஆகாயப்படை தளத்தை பார்வையிட்டு, அனைத்துலக மீட்புக்குழுவினருக்கு நன்றியை தெரிவிக்க முடிவு செய்திருக்கிறார்” என்று தெரிவித்தார்.

தேடுதல் பணி குறித்த முழு விபரங்களையும், ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் நேற்று நஜிப்பிடம் தெரிவித்ததாகவும் நேற்று புத்ரா அனைத்துலக மையத்தில் நடைபெற்ற தினசரி செய்தியாளர் கூட்டத்தில் ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அதோடு, நாட்டின் தற்காப்பு அமைச்சராக இருக்கும் தான் அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் செவ்வாய் கிழமை முதல் வியாழக்கிழமை வரை நடைபெறும் ஆசிய தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதையும் ஹிஷாமுடின் அறிவித்தார்.