Home உலகம் இராணுவ ஆயுதங்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய ஜப்பான் முடிவு !

இராணுவ ஆயுதங்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய ஜப்பான் முடிவு !

459
0
SHARE
Ad

6a010535fc8c90970b0120a7b1524b970b-800wiஜப்பான், ஏப்ரல் 2 – கடந்த 50 ஆண்டுகளாக உலக அமைதியை விரும்பி, பிற நாடுகளுக்கு இராணுவ ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதில்லை என்ற கொள்கையில் இருந்த ஜப்பான், தனது சுய கட்டுப்பாட்டை தளர்த்திக்கொள்ள முடிவு செய்துள்ளது.

தமது ஆயுத உற்பத்தி தொழிற்துறையை வலுப்படுத்துவதற்காகவும், நட்பு நாடுகளுடன் தமது உறவை மேம்படுத்திக்கொள்வதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜப்பான் கூறுனாலும்,

ஜப்பான்-சீனாவிற்கிடையே கிழக்கு சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகளின் எல்லைப் பிரச்சனையில் ஏற்பட்ட மோதல் காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

#TamilSchoolmychoice

டாங்கிகள், குண்டுவீசும் விமானங்கள் போன்ற தாக்குதல் கருவிகளைத் தவிர்த்து, ரோந்து கப்பல்கள் மற்றும் கண்ணிவெடி கண்டுபிடிக்கும் கருவிகள் போன்றவை மட்டுமே ஏற்றுமதி செய்யவிருப்பதாகவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

ஜப்பானின் இந்த முடிவு குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹாங் லெய் கூறுகையில், “ஜப்பானின் இந்த இராணுவப் பாதுகாப்புக் கொள்கை, பிராந்திய நாடுகளுக்கு ஸ்திரத்தன்மை பற்றிய கவலையை அளிக்கிறது.

ஜப்பானின் இந்த நகர்வை சீனா உற்றுக் கண்காணிக்கும்” என தெரிவித்துள்ளார். சீனா விடுக்கும் சவால்களை எதிர்கொள்ள ஜப்பான் தயாராகிவருகிறது, என்பதனை ஜப்பானின் தற்சமய நடவடிக்கைகள் எடுத்துகாட்டுகின்றன.