ஒட்டாவா, ஏப்ரல் 16 – இலங்கை அரசு தலைமை வகிக்கும் ‘காமன்வெல்த்’ (Commonwealth) அமைப்புக்கு, கனடா தன் பங்களிப்பாக 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக வழங்கி வருகிறது. தற்போது அதனை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.
இது குறித்து கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜான் பேர்ட் கூறுகையில், “இலங்கையில் தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் மனித உரிமை மீறல்கள் கவலை அளிப்பதாக உள்ளது.
இதனால் கனடா அரசால் அளிக்கப்பட்டு வந்த நிதியை இலங்கைக்கு அளிப்பதை நிறுத்திவிட்டு, காமன்வெல்த்தின் திட்டங்களான, குழந்தை திருமணங்களைத் தடுப்பது,
கட்டாயத் திருமணங்களைத் தடுப்பது, மனித உரிமை மேம்பாடு போன்றவற்றிற்கு நேரடியாக கனடா அரசே பயன்படுத்தப்போகின்றது ” என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த காமன்வெல்த் உச்சி மாநாட்டை கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹர்பெர் புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.