Home கலை உலகம் த்ரிஷா பெயரை நாய்குட்டிக்கு வைத்த தோழிகள் – நன்றி கூறிய த்ரிஷா!

த்ரிஷா பெயரை நாய்குட்டிக்கு வைத்த தோழிகள் – நன்றி கூறிய த்ரிஷா!

661
0
SHARE
Ad

trisசென்னை, ஏப்ரல் 18 – த்ரிஷா பெயரைநாய் குட்டிகளுக்கு வைத்தனர் அவரது தோழிகள். செல்லப்பிராணிகளான நாய்கள் மீது அன்பு கொண்டவர் த்ரிஷா.

அனாதையாக ரோட்டில் தவிக்கும் நாய்குட்டிகளுக்கு அடைக்கலம் தருவதுடன், நாய்களுக்கான சேவை அமைப்பான பிட்டாவில் உறுப்பினராகவும் இருக்கிறார்.

சமீபத்தில் இவரிடமிருந்து 2 நாய்குட்டிகளை அவரது தோழிகள் தங்கள் வீட்டில் வைத்து வளர்ப்பதற்காக எடுத்துச் சென்றனர். த்ரிஷாவிடம் இருந்து அந்த நாய் குட்டிகளை வாங்கியதால் அவைகளுக்கு த்ரிஷ் என்று செல்லப்பெயர் வைத்தனர்.

#TamilSchoolmychoice

இதையறிந்த த்ரிஷா, தோழிகளுக்கு நன்றி கூறினார். இதுபற்றி தனது இணையத்தள பக்கத்தில் அவர் கூறியதாவது, எனது 2 தோழிகள் தாங்கள் தத்தெடுத்த 2 நாய்குட்டிகளுக்கு த்ரிஷ் என பெயர் சூட்டியிள்ளனர்.

விரைவில் இதேபோன்று இன்னும் ஏராளமான நாய் குட்டிகளுக்கு என் பெயர் வைப்பார்கள் என்று எண்ணுகிறேன். இது எனக்கு கிடைத்த கவுரவமாக கருதுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்