கோலாலம்பூர், ஏப்ரல் 25 – 10 நாட்கள் முன்னதாக காவல் துறையிடம் முறையான முன்னறிவிப்பு இல்லாமல் பேரணியை நடத்துவதற்கு ஒருவரை தண்டிப்பது என்பது மலேசிய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என வரலாற்றுப்பூர்வ தீர்ப்பை மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று வெளியிட்டது.
ஒரு பேரணி நடத்துவதற்காக முன் அனுமதி பெறவில்லை என சட்ட விதி 9(5) அமைதிப் பேரணி சட்டத்தின் கீழ் தண்டிப்பது மலேசிய அரசியலமமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று இன்று மேல் முறையீட்டு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இதன் மூலம் கடந்த 2013 பொதுத் தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்ட கறுப்பு 505 பேரணி நடத்தப்பட்டது காரணமாக அதன் ஏற்பாட்டாளருக்கு விதிக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் வெள்ளி அபாரதத் தண்டனை செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த மேல் முறையீட்டை விசாரித்த 3 நீதிபதிகளும் ஒருமனதாக இந்தத் தீர்ப்பை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.