Home நாடு உலகக் கிண்ண இறுதிப் போட்டி: டத்தாரான் மெர்டேக்காவில் நஜிப், கைரி கண்டு ரசித்தனர்!

உலகக் கிண்ண இறுதிப் போட்டி: டத்தாரான் மெர்டேக்காவில் நஜிப், கைரி கண்டு ரசித்தனர்!

588
0
SHARE
Ad

Najibகோலாலம்பூர், ஜூலை 14 – உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தைக் காண இன்று அதிகாலை டத்தாரான் மெர்டேக்காவில் பிரதமர் நஜிப் துன் ரசாக் மற்றும் இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் ஆகிய இருவரும், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான காற்பந்து ரசிகர்களுக்கு மத்தியில் அமர்ந்து, பெரிய திரையில் விளையாட்டை கண்டு ரசித்தனர்.

இதில் ஜெர்மனி அணி, அர்ஜெண்டினாவை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து நஜிப் தனது டிவிட்டர் இணையப் பக்கத்தில், “என்ன ஒரு திகிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டி! புதிய உலக சேம்பியன் ஜெர்மனி மிகவும் அற்புதமாக விளையாடியது. அதனை எதிர்த்து விளையாடிய அர்ஜெண்டினா மிகவும் சவாலான எதிரணி” என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில் கைரி ஜமாலுதீன் தனது டிவிட்டர் இணையப் பக்கத்தில், “ஜெர்மனி நன்றாக விளையாடியது. அதிர்ஷ்டம். மெஸ்ஸி நீண்ட நாட்கள் வாழ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, பெர்னாமா அரசு செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த வியாழக்கிழமை நஜிப் துன் ரசாக் தனது டிவிட்டர் பக்கத்தில், ஜெர்மனி தான் வெற்றி பெரும் என்று ஆரூடம் கூறியதாகவும், அவரது ஆரூடம் பலித்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு, ஸ்பெயின் அணி தான் இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று நஜிப் காற்பந்துப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னரே தானாக முன்வந்து தனது கருத்தை அவ்வளவு உறுதியாக தெரிவித்தார்.

ஆனால் துரதிருஷ்டமாக சிலியுடன் 0-2 என்ற கோல் கணக்கிலும், ஹாலந்துடன் 1-5 என்ற கோல் கணக்கிலும் ஸ்பெயின் அணி தோற்று ஆரம்பத்திலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.