Home உலகம் திபத்தில் சீனாவின் புதிய ரெயில் சேவை – கலக்கத்தில் இந்தியா!

திபத்தில் சீனாவின் புதிய ரெயில் சேவை – கலக்கத்தில் இந்தியா!

500
0
SHARE
Ad

ChinaHSR2பெய்ஜிங், ஆகஸ்ட் 16 – திபெத்தின் லாஸா மற்றும் ஸிகட்ஸே பகுதியை இணைக்கும் விதமாக 253 கிலோ மீட்டர் தூர ரெயில் சேவையை சீனா நேற்று தொடங்கியது.

பிரச்சனைக்குரிய பகுதியாக கருதப்படும் இந்தியாவின் சிக்கிம் மாநில எல்லையோரம் இந்த புதிய ரெயில் சேவை அமைந்துள்ளதால் இந்திய சீனா உறவில் மீண்டும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகின்றது.

திபெத் பகுதியை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அந்தப் பகுதியில் இரண்டாவது நீண்ட தூர ரெயில் சேவைக்கான இந்த திட்டத்தை கடந்த 2010-ம் ஆண்டு 2.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டில் துவங்கியது.

#TamilSchoolmychoice

இந்த புதிய ரெயில் சேவை மூலம் லாஸா மற்றும் ஸிகட்ஸே பகுதிக்கு இடையேயான பயண நேரம் மிகவும் குறைந்துள்ளது. இதன் மூலம் இந்தியா, சீனா இடையே போர் மூண்டால் சுமார் இரண்டு மணிநேர அவகாசத்தில், திபெத் பகுதியில், தனது இராணுவத்தை சீனாவால் குவிக்க முடியும் என இந்திய இராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

india,இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தையும் தங்களது பகுதி என சொந்தம் கொண்டாடி வரும் சீனா, புதிய ரெயில்பாதையின் அடுத்தகட்ட விரிவாக்கத்தை அருணாச்சலப் பிரதேசத்தில் வரும் 2020-ம் ஆண்டிற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியா, பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகளைத் ரெயில் தண்டவாளங்களின் மூலமாக இணைக்க முடியும். சீனாவின் இந்த அதிரடி வியூகங்கள் குறித்து இந்திய இராணுவம், அரசின் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகின்றது.