Home கலை உலகம் ‘துஷ்ராஜனம்’ படத்தில் நடித்த கல்பனா காலமானார்!

‘துஷ்ராஜனம்’ படத்தில் நடித்த கல்பனா காலமானார்!

667
0
SHARE
Ad

actress kalpanaகோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – ‘துஷ்ராஜனம்’ என்ற மலேசியத் திரைப்படத்தில் ‘கருப்பு’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதைக் கவர்ந்த நடிகை கல்பனா சுந்தராஜு நேற்று காலமானார்.

வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மலேசியா திரைப்படவிழாவில் (Malaysia Film Festival), ‘துஷ்ராஜனம்’ படத்தில் நடித்ததற்காக ‘சிறந்த நடிகை’ விருதுக்கான பட்டியலில் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவரது அகால மரணம் மலேசியத் திரையுலகை பேரதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

#TamilSchoolmychoice

மறைந்த கல்பனாவிற்கு  மலேசியக் கலைஞர்கள் பேஸ்புக், டிவிட்டர் வாயிலாக தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

வரும் சனிக்கிழமை, 8, ஜாலான் கெலா 8/6 செக்‌ஷன் 8, பெட்டாலிங் ஜெயாவில், காலை 11.30 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிக்குள் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது.