Home உலகம் இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும் – பான் கி மூன்

இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும் – பான் கி மூன்

479
0
SHARE
Ad

SecretaryGeneralஜெனிவா, ஆகஸ்ட் 28 – இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளை  பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஐ.நா.  பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும்  இடையே வெளியுறவுச் செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை 25-ம்  தேதி நடக்க இருந்தது. அந்நிலையில் காஷ்மீர் பிரிவினைவாதத்  தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கான பாகிஸ்தான்  தூதர் அப்துல் ஹாசித் முயற்சி மேற்கொண்டார்.

இந்திய அரசு  எச்சரிக்கையையும் மீறி அவர் கூரியத் தலைவர்களுடன் பேசியதை  தொடர்ந்து, வெளியுறவுச் செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தையை  இந்தியா ரத்து செய்தது.

#TamilSchoolmychoice

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி  மூன் இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை  சுமூகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று யோசனை  தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பேச்சுவார்த்தையை ஊக்குவிக்க ஐ.நா.  நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு பான் கி மூனின் செய்தித்  தொடர்பாளர் அலுவலகம் பதில் அளிக்க மறுத்துள்ளது.