Home நாடு ஐ.எஸ்.ஐ.எஸ். செயல்பாடுகள் இஸ்லாம் சட்டத்துக்கு எதிரானது – பிரதமர் நஜிப்

ஐ.எஸ்.ஐ.எஸ். செயல்பாடுகள் இஸ்லாம் சட்டத்துக்கு எதிரானது – பிரதமர் நஜிப்

612
0
SHARE
Ad

najibகோலாலம்பூர், ஆகஸ்ட் 29 – ஐ.எஸ்.ஐ.எஸ். செயல்பாடு இஸ்லாம் மதச் சட்டத்துக்கு எதிரானது என பிரதமர் நஜீப் ரசாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஐ.எஸ்.ஐ.எஸ். நடவடிக்கைகள், இறைதூதர் முகமது நபியின் படிப்பினைகளுக்கு எதிராக இருக்கின்றன.

இது இஸ்லாம் மதச் சட்டத்துக்கு எதிரானது. சிரியாவிலும், இராக்கிலும் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் எங்கள் மத நம்பிக்கை, கலாச்சாரம், அடிப்படை மனிதநேயத்திற்கு எதிராக அமைந்துள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.

மலேசியப் பெண்கள் மூன்று பேர், ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் பாலியல் தேவைக்காக தங்களை அப்படையுடன் இணைத்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்தியின் பின்னணியிலேயே, பிரதமர் நஜீப், ஐ.எஸ்.ஐ.எஸ். படைகளை கடுமையாக சாடியுள்ளார்.

#TamilSchoolmychoice

அல்காய்தா அமைப்பின் இருந்து பிரிந்து ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற கிளர்ச்சிப்படை உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பானது, இராக், சிரியாவில் பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளன. சன்னி முஸ்லீம்கள் தலைமையிலான ஆட்சியை அமைக்க இவர்கள் முயன்று வருகின்றனர்.