Home கலை உலகம் ‘ஐ’ விக்ரம் நடிப்பைப் பார்த்து வியந்து பாராட்டிய அர்னால்ட்!

‘ஐ’ விக்ரம் நடிப்பைப் பார்த்து வியந்து பாராட்டிய அர்னால்ட்!

871
0
SHARE
Ad

arnold,சென்னை, ஆகஸ்ட் 29 – ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ‘ஐ’ படத்தை பாத்துவிட்டு விக்ரமை வியந்து பாராட்டியுள்ளார்.  வரும் செப்டம்பர் 15-ம் தேதி நடக்கும் ‘ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது.

சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்ற படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரனின் தம்பி ரமேஷ் பாபு அர்னால்ட் ஸ்வாஸ்நேகரை சந்தித்தார். அப்போது அவருக்கு அர்னால்ட் சார்பில் விருந்தளிக்கப்பட்டது.

arnoldரமேஷ்பாபு ‘ஐ’ படத்தை அர்னால்டுக்கு காட்டினார். அதனைப் பார்த்து வியந்தவர், ஹாலிவுட் படத்தை பார்ப்பது போல் உள்ளது என பாராட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

முக்கியமாக விக்ரமின் உடல்ரீதியான மாற்றத்தை வியந்து பாராட்டியிருக்கிறார். இந்தப் படத்துக்காக 120 கிலோ எடை போட்ட விக்ரம், பிறகு ஐம்பது கிலோ அளவுக்கு உடல் எடையை குறைத்துள்ளார். இந்த மாற்றம் விரைவில் வெளியிடப்படவுள்ள ஒரு நிமிட முன்னோட்டத்திலும் (டிரைலர்) இடம்பெற்றுள்ளது.

vikramsaiலாஸ் ஏஞ்சல்ஸ் சந்திப்பின் போது ‘ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதை அர்னால்ட் உறுதி செய்தார். சென்னையில் விழா நடக்கும் இடம் இன்னும் முடிவாகவில்லை. பிரமாண்டமான இடமாக தேடி வருகின்றனர் படக்குழுவினர்.