Home நாடு காருக்குள் உறவு கொண்ட இளம் ஜோடி கைது – தப்பியோட பல கார்களை இடித்து சேதம்

காருக்குள் உறவு கொண்ட இளம் ஜோடி கைது – தப்பியோட பல கார்களை இடித்து சேதம்

618
0
SHARE
Ad

Malaysian Police Logoபெட்டாலிங் ஜெயா, செப். 4-நள்ளிரவில் காரில் பாலியல் உறவு கொண்ட இளம் ஜோடி ஒன்று காவல் துறையிடம் சிக்கியது. இதையடுத்து தப்பியோட முயன்ற அந்த ஜோடி, அந்த முயற்சியில்,  பல கார்களை மோதி சேதப்படுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து, அந்த ஜோடியை காவல் துறையினர் கைது செய்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்தச் சம்பவம் நிகழும் முன்பாக கோத்தா டாமன்சாரா பகுதியில், இரவு சுமார் 10.30 மணியளவில், 17 வயதே ஆன அவ்விருவரும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் நீலநிற காருக்குள் தென்பட்டனர். இதையடுத்து போலீஸ் ரோந்து வாகனம் அந்த ஜோடியை அணுகியது.

#TamilSchoolmychoice

“ஆள் நடமாட்டம் இல்லாத தொழிற்கூடப் பகுதியில் அந்தக் கார் நிறுத்தப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த நாங்கள் காரை அணுகி, இருவரையும் அதிலிருந்து இறங்கும்படி கூற, அந்த நபர் காரை வேகமாக ஓட்டிச் சென்றார்,” என்று ஏசிபி அஸ்மி அச்சம்பவத்தை விவரித்தார்.

சுமார் ஒருமணி நேர துரத்தலுக்குப் பின்னர் டாமன்சாரா டோல்கேட் அருகே மற்றொரு கார் மீது இளம்ஜோடியின் கார் மோதியது. இதையடுத்து இருவரும் சிக்கினர்.

“இருவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டன. சிகிச்சைக்குப் பின்னர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்றபோது பல கார்களுக்கு சேதம் ஏற்படுத்தி உள்ளனர்,” என்றார் ஏசிபி அஸ்மி.

அபாயகரமாக வாகனமோட்டுதல் மற்றும் அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.