Home வணிகம்/தொழில் நுட்பம் எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி பொருட்களுக்கு ஜிஎஸ்டி-ல் இருந்து விலக்கு!  

எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி பொருட்களுக்கு ஜிஎஸ்டி-ல் இருந்து விலக்கு!  

565
0
SHARE
Ad

gst-in-malaysiaகோலாலம்பூர், செப்டம்பர் 22 –  அனைத்து நிறுவனங்களுக்கும் ‘பொருட்கள் மற்றும் சேவை வரி’ (Goods and Services Tax)-ஐ அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், அந்த வரி எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி பொருட்களுக்கும் விதிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும், அதுபற்றிய முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்று அரச மலேசிய சுங்க துறையின் பொது மேலாளர் டத்தோஸ்ரீ  கசாலி ஸாலி அகமட் கூறியுள்ளார்.

வரும் 2015 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி தொடங்கி அனைத்து நிறுவனங்களுக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி அதிகாரப்பூர்வ அமலுக்கு வரும் என்று கூறப்படுகின்றது.

வரிவிதிப்பு பற்றி நிதி ஆலோசகர்கள் நேர்மறையாக கூறினாலும், இந்த வரிவிதிப்பு முறை, நாட்டில் பணக்காரர்கள், ஏழைகள் என்ற பாகுபாட்டை மேலும் வளர்க்கும் என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில், வர்த்தக பரிமாற்றங்களுக்கு ஆதாரமாக விளங்கும் எரிசக்தி பொருளான எண்ணெய்க்கு இந்த வரியிலிருந்து விளக்கு அளிக்கப்படும் என  கஸாலி அகமட் சமீபத்தில் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

இதே போன்றதொரு கருத்தினை அந்த அமைப்ப்பின் மூத்த துணை இயக்குனர் ஐசக் தாவூத்த்தும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசு வரிவிதிப்பு குறித்து எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி பொருட்களுக்கு ஆராய்ந்து வந்தாலும், ஏனைய பொருட்களுக்கு 2015-ம் ஆண்டு முதல் 6 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.