Home இந்தியா பருவநிலை மாறுபாடு மாநாட்டில் மோடி பங்கேற்க வேண்டும் – பான் கி-மூன்!

பருவநிலை மாறுபாடு மாநாட்டில் மோடி பங்கேற்க வேண்டும் – பான் கி-மூன்!

543
0
SHARE
Ad

modiஜெனிவா, செப்டம்பர் 19 – பருவநிலை மாறுபாடு தொடர்பான ஐநா மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க வேண்டும் என்று ஐநா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 27-ம் தேதி நடைபெற இருக்கும் ஐ.நா.சபை கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பது உறுதியாகி இருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக எதிர்வரும் 23-ம் தேதி உலகத் தலைவர்கள் பங்குபெறும் பருவநிலை மாறுபாடு தொடர்பான ஐ.நா மாநாட்டிலும் மோடி பங்கு பெற வேண்டும் என்று பான் கி-மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட 120 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். எனினும் தற்போது வரை மோடி அந்த மாநாட்டில் பங்கேற்கும் திட்டம் இல்லை என்றே இந்திய அரசு வட்டாரம் கூறி வருகின்றது.

#TamilSchoolmychoice

ஐ.நா.சபைக்கு இந்தியப் பிரதமரின் வரவு பற்றி பான் கி-மூன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:- “ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்க இருக்கும் இந்திய பிரதமர் மோடி, பருவநிலை மாறுபாடு மாநாட்டில் பங்குபெற முடியாத நிலை இருப்பது சற்றே வருத்தத்தை அளிக்கின்றது. அவர் பங்கேற்க வேண்டுமென்று நான் உண்மையில் விரும்புகின்றேன்” என்று கூறியுள்ளார்