Home உலகம் ஸ்காட்லாந்து, பிரிட்டனுடன் இணைந்திருக்க பெரும்பான்மையினர் ஆதரவு

ஸ்காட்லாந்து, பிரிட்டனுடன் இணைந்திருக்க பெரும்பான்மையினர் ஆதரவு

901
0
SHARE
Ad

Scotland cessation voteஸ்காட்லாந்து, செப்டம்பர் 19 – உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடனும் பரபரப்புடனும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்காட்லாந்து நாடு பிரிவினைக்கான வாக்கெடுப்பின் முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

பகுதிவாரியான வாக்குகளின் படி இதுவரை 54 சதவீதத்தினருக்கும் மேற்பட்ட மக்கள் ஸ்காட்லாந்து பிரிட்டனுடன் இணைந்திருக்க வேண்டும் என வாக்களித்துள்ளனர்.

கலாச்சார, பாரம்பரிய, இன ரீதியில், ஸ்காட்லாந்து தனி நாடாக பிரிட்டனிடமிருந்து பிரிய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாளாக இருந்து வருகின்றது. அதற்கேற்ப நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

 

வாக்கெடுப்பின் முடிவுகளின் படி பெரும்பான்மையான மக்கள் – ஏறத்தாழ 54 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் – இதுவரை ஸ்காட்லாந்து தனிநாடாக பிரியக் கூடாது, பிரிட்டனுடன்தான் இணைந்திருக்க வேண்டும் என வாக்களித்துள்ளனர்.

இதன் காரணமாக, ஸ்காட்லாந்து பிரிட்டனின் ஒரு மாநிலமாக, ஒரு பிரதேசமாக தொடர்ந்து நிலைபெற்றிருக்கும். கடந்து 307 ஆண்டாக ஸ்காட்லாந்து பிரிட்டனின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றது.

englandஇங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நாடான பிரிட்டனிலிருந்து பிரிந்து தன்னிச்சையான அரசுமுறையை ஏற்படுத்த ஸ்காட்லாந்து விடுத்த கோரிக்கை விடுத்து வந்தது.

மக்களும் தனிநாடும் சுதந்திர அதிகாரமும் கேட்டு பல போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன் முடிவாக மக்களின் வாக்கு எண்ணிக்கையை அறிய பிரிட்டன் முடிவு செய்தது.

இந்நிலையில் நேற்று அங்கு வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. சுமார் 32 மையங்களில் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில், 42 லட்சம் மக்கள் பங்கேற்று வாக்களித்தனர்.

இருப்பினும் முழுமையான வாக்கு விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதோடு அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.