Home நாடு புக்கிட் பிந்தாங் குண்டு வெடிப்பு: பயங்கரவாதமல்ல! பழிவாங்கும் நோக்கமே!

புக்கிட் பிந்தாங் குண்டு வெடிப்பு: பயங்கரவாதமல்ல! பழிவாங்கும் நோக்கமே!

548
0
SHARE
Ad

BOMB 2கோலாலம்பூர், அக்டோபர் 10 – குண்டர் கும்பல்களுக்கு இடையே நிகழ்ந்து வரும் உரிமைப் போராட்டம் தொடர்பில், பழிவாங்கும் நோக்கிலேயே புக்கிட் பிந்தாங் கையெறி குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது ஒரு பயங்கரவாத செயலல்ல என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த சன் வளாகத்தில் அமைந்துள்ள கேளிக்கை விடுதியின் உரிமையாளரை கொலை செய்யும் நோக்கத்திலேயே கையெறி குண்டு வீசப்பட்டதாக குற்றப் புலனாய்வு பிரிவின் துணை இயக்குநர் ஏசிபி கைரி அஹ்ரசா செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

“கையெறி குண்டை வீசிய நபருக்கும் அந்த விடுதியின் உரிமையாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்க வேண்டும் என நம்புகிறோம். இந்த தாக்குதலுக்கு காரணமானவரை தேடி வருகிறோம். எனினும் இது தீவிரவாத செயல் அல்ல என்பது தெரிய வந்துள்ளது,” என்றார் கைரி அஹ்ரசா.

வியாழக்கிழமை அதிகாலை 4.45 மணிக்கு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 14 பேர் காயம் அடைந்துள்ளனர்.